90ஸ் காலகட்டத்தில் பல கோடிகள் வசூல் செய்து… பிளாக் பஸ்டர் ஹிட்டான ரஜினியின் ‘தளபதி’… இத்தனை கோடியா?… வைரலாகும் தகவல் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் மம்முட்டி என்ற இரண்டு முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் ‘தளபதி’. இத்திரைப்படம் 1991ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது.

   

ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்த திரைப்படம், மாபெரும் வரவேற்பு பெற்றது. தற்பொழுது பிளாக்பஸ்டர் ஹிட்டான இத்திரைப்படத்தின் உலக அளவிலான வசூல் சாதனை விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படம் உலக அளவில் அவை 13 கோடி வாசல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்திய அளவில் மற்றும் 10.60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும், வெளிநாட்டில் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. 1991ல்  இத்திரைப்படம் இந்த அளவிற்கு வசூல் செய்தது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. தற்பொழுது திரைப்படத்தின் வசூல் விபரங்களை கேட்ட ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.