”ரக்ஷிதா என்மேல case கொடுக்க இவர் தான் காரணம்”… மனம் திறந்து பேட்டியளித்த ரக்ஷிதாவின் கணவர் தினேஷ்… வைரலாகும்  வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மிகப் பிரபலமானவர் சீரியல் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து இவர், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த சக சீரியல் நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இவர் மன அமைதிக்காக வேண்டி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி உள்ளார்.

சமீபத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம் பிக் பாஸ் ரக்ஷிதா  தனது கணவர் தினேஷ் தனக்கு  ஆபாசம் மெசேஜ் அனுப்பி தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். தற்பொழுது இதன் அடிப்படையில் ரக்ஷிதாவின் கணவர் தினேஷை பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. இந்த பேட்டியில் நடிகர் தினேஷ் கூறியுள்ளதாவது, ‘பிரச்சினை  ஆரம்பித்ததில் இருந்தே தான் சேர்ந்து வாழவே  முயற்சி செய்வதாகவும், ஆனால் ரக்ஷிதா இரண்டு வருடங்களாக இதுவரை தன்னிடம் பேசவில்லை என்றும் கூறியுள்ளார் கூறியுள்ளார்.

மேலும் போலீஸ் அவர் கொடுத்த கேசின் அடிப்படையில் தன்னை விசாரித்ததாகவும் கூறியுள்ளார்.  போலீஸ் விசாரித்த போது தன் மேல் எந்த குற்றமும் இல்லை என்று அவர்களை கூறி தன்னை விடுவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் தினேஷ் .மேலும் இது தொடர்பான பல விஷயங்களை கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். தற்பொழுது அவரே பேட்டி அளித்த இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….