ரஞ்சிதமே….! ரஞ்சிதமே….! பாடலுக்கு வைப் செய்த தாத்தா…. தன்ன ஒரு டிஜேன்னு நினைச்சுக்கிட்டாரு போல….!!!!

ஒரு தாத்தா சைக்கிளில் பொருட்களை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்து கொண்டே அழகாக பாடல் பாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. திறமைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை பலரும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்களுக்கு வயதாகிவிட்டது என்று கூறிக்கொண்டு எந்த வேலையும் செய்யாமல் மூளையில் முடங்கி கிடக்கும் அதே சமயத்தில் பல முதியவர்கள் தற்போது வரை வேலை செய்து வருகிறார்கள்.

   

அது மட்டும் இல்லாமல் இளைஞர்கள் செய்யக்கூடிய சில விஷயங்களை தங்களாலும் செய்ய முடியும் என்று செய்து காட்டி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்களை நாம் அதிக அளவில் பார்த்துள்ளோம். அந்த வகையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாடல் என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

Happy little schoolboy lying on older senior grandfather on floor carpet, having fun together in living room. Joyful different generations family playing, enjoying free weekend time at home.

இந்த தாத்தாவுக்கும் பாடல் மிகவும் பிடிக்கும் போல , சைக்கிளில் பொருட்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வரும் தாத்தா ஒரு ரேடியோ பெட்டியை வைத்து அதில் பாடலை ஒளிபரப்பு செய்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் தன்னை ஒரு டிஜே என்ற நினைப்பில் காதில் மைக்கை மாட்டிக் கொண்டு அழகாக பாடல் ஒழிக்கப்படும்போது தானும் பாடுகிறார். இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by 🦋×͜×ʀᴀᴊᴜ★🦋 (@__itzz_me_raju__)