பிக் பாஸ் போட்டி மணி மணியின் பிரேக்கப்புக்கு ரவீனா தான் காரணமா ?… காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தாயார் …

விஜய்  டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒலிபரப்பான சீரியல்களில் ஒன்றுதான் ‘மௌனராகம் 2′ இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் இருந்து வரவேற்பு பெற்றவர் நடிகை ரவீனா.’ராட்சசன்’ படத்தில் நடித்து தனக்கான ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

   

அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் ‘பிக் பாஸ் சீசன் 7’போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். இந்நிலையில் அங்கு சக போட்டியாளரான மணி மற்றும் ரவீனா காதலில்  இருப்பதாக செய்திகள் பரவினர்.முன்னதாக மணி ஃபெலினா என்பவருடன் காதலில் இருப்பதாக பரவலாக கூறப்பட்டது.

அந்த காதல் பிரேக்கப்பிற்கும் காரணம் ரவீனாதான் என கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் ரவீனாவின் தாய் அளித்த பேட்டி ஒன்றில், மணி-ரவீனா இருவரும் நண்பர்கள். நல்ல பாண்டிங் இருக்கிறது.சாதாரணமாக மணியுடன் ரவீனா எப்படி விளையாட்டுத்தனமாக இருப்பாரோ அப்படிதான் பிக்பாஸிலும் இருக்கிறார் எனக் கூறி காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.