இப்படி கூட பைக்கை ஓட்டலாமா?…பைக்கில் சாகசம் செய்யும் விஜே ரக்சன்… வீடியோவை பார்த்து ‘ஐயோ பாத்து’ என பதரும் ரசிகர்கள்…

விஜய் டிவி பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர்  VJ ரக்‌ஷன்.  பொதுவாக விஜய் தொலைக்காட்சியானது திறமைகளோடு இருக்கும் பலரையும் மேடை ஏற்றி அழகு பார்ப்பதில் முதலிடம் வகிக்கிறது என்று கூறலாம்.அந்த வகையில் அன்று முதல் இன்று வரை பல திறமையானவர்களுக்கு பிளாட்பார்ம் ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையையும் விஜய் டிவி ஏற்படுத்தி தந்துள்ளது.

   

விஜய் டிவியில் வேலை பார்க்கும் பெரும்பாலான நபர்கள் சின்னத்திரையில் கலக்குவதோடு நின்று விடாமல் வெள்ளித்திரைகளும் கலக்கி வருகிறார்கள் அதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம், மாகாபா, குக் வித் கோமாளி புகழ் போன்றவர்களை நாம் கூறலாம்.

அந்த வரிசையில் கலக்கப்போவது யாரு சீசன் 5ன் மூலம் விஜய் டிவி தொகுப்பாளராக அறிமுகமான ரக்ஷன், ஜாக்குலின் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் இவரது பரபரப்பான கலகலப்பான பேச்சால் அனைவரையும் அசத்தி விடக்கூடிய திறமை கொண்டவர். அடுத்தடுத்து சீசன்களை தொகுத்து வழங்கி இவருக்கு என்று ஒருவர் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கோக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தற்போது வரை இந்த நிகழ்ச்சியை ரக்ஷனே தொகுத்து வழங்கி வருகிறார் மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றொரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ‘ரெடி ஸ்டெடி போ ‘ என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் சரண்யா என்பவருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவ,ர் தற்பொழுது பைக்கில் சாகசம் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார் .இந்த வீடியோவானது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Rakshan Vj (@rakshan_vj)