‘REAL சீன் ஆன REEL சீன்’….. Shooting Spot-இல் பறந்து விழுந்த பிரபல இளம் நடிகை…. வைரலாகும் வீடியோ இதோ….

தமிழில் கோமாளி, பப்பி மற்றும் மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் தற்போது க்ரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகின்றார். அதனை இயக்குனர் அபிஷேக் பசந்த் இயக்குகிறார். சோசியல் திரில்லர் படமான இந்தத் திரைப்படத்தில் செட்டில் ஒரு ரிஸ்க்கான சண்டைக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது சம்யுக்தாவுக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளது. கணுக்கால் மற்றும் முழங்காலில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்யுக்தா தன்னை வற்புறுத்தி ஆபத்தான சண்டை காட்சிகளை தானே செய்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடைபிடிப்பில் காயம் ஏற்பட்டு அவர் சுருண்டு விழும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *