
நடிகை சமந்தா கடந்த 2010-ஆம் வருடத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ உட்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்தார்.
அதன்பிறகு, விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடி சேர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். எனினும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல சோகங்கள் நிறைந்ததாக இருந்தது. காதல் கணவர் நாக சைதன்யா உடனான விவாகரத்து, உடல்நல பிரச்சனைகள் என்று அனைத்தையும் தாங்கிக் கொண்டு திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது, இந்தியில் வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார். இத்தொடர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும், அதன் பிறகு சமந்தா நடிக்கும் திரைப்படம் குறித்து எந்தவித அறிவிப்போ தகவலோ வெளிவரவில்லை. எனவே, சமந்தா ரசிகர்கள் அவரின் அடுத்த திரைப்படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் சமந்தா போட்டோ சூட் நடத்தி, அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை விதவிதமாக இணையதளங்களில் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார். இந்நிலையில், சமந்தா நடித்திருக்கும் ஒரு விளம்பரம் வெளிவந்திருக்கிறது. மலையாளத்தில் வெளியான இந்த விளம்பரத்தில் அவர் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடித்திருக்கிறார். வீடியோவை பார்த்த பலரும் 72 வயது நடிகருக்கு சமந்தா ஜோடியாகிட்டாரே என்று கலாய்த்து வருகிறார்கள்.
New Ad #Mammootty and #SamanthaRuthPrabhu ????❤️????#Samantha | #Mammukka
— Tharani ᖇᵗк (@iam_Tharani) March 21, 2024