மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா… அதிர்ச்சியில் ரசிகர்கள்….இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை சமந்தா. இவர் சென்னை பல்லாவரத்தில் பிறந்து .வளர்ந்தார் இவர் ஆரம்ப காலகட்டத்தில் கடைகளில் வெல்கம்  கேர்ளாக  பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து இவர் காவேரி என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

   

அதைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா?, நான் ஈ போன்ற படங்களில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.  ரசிகர்கள். நீ தானே என் பொன்வசந்தம் ,கத்தி, தெறி, சூப்பர் டீலக்ஸ் ,என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார் .

தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை  காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு படத்தை கைவிடாமல் படத்தில் நடித்து வந்தார்.பிறகு  இருவரின் கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து  செய்து கொண்டனர்.

நடிகை சமந்தா மயோசிஸ் நோயால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். நோய் தொற்றின் தாக்குதலினால் உடல்நிலை நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமடையவில்லையாம். ஒரு வருடத்திற்கு முன்பாகவே அறிவித்திருந்தார்.

அதற்காக சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் அவர் ஒப்புக்கொண்ட படங்களில் பணிகளையும் செய்து முடித்துவிட்டார்.படுக்கையாக இருந்ததை பற்றி பேட்டிகளில் சமந்தா கூறியது ரசிகர்களையும் எமோஷ்னல் ஆக்கியது. தற்போது சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு முழுமையாக குணமடைந்து பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

தற்போது சமந்தா மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சை எடுத்துக்கொள்வதாக அவர் பதிவிட்டு இருக்கிறார்.