காதல் மனைவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ்.. சைந்தவியை பாராட்டிய விஜய் மனைவி சங்கீதா..? நடந்தது என்ன..?

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார். இவர் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்த பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை ஜிவி பிரகாஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

GV Prakash divorce: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து முடிவுக்கு இந்த  விஷயம் தான் காரணமா? | GV Prakash and Saindhavi plans to divorce for these  reasons? - Tamil Filmibeat

   

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்ஷும், சைந்தவியும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தது. இதனால் ரசிகர்களும் பிரபலங்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் சைந்தவி பேசிய பழைய வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் எட்டாம் வகுப்பு படித்த சைந்தவிக்கு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஜி.வி பிரகாஷ் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

அப்பவே வீட்டை விட்டு துரத்தியிருப்பாங்க.. ஜி.வி. பிரகாஷ் குமார் மனைவி  சைந்தவி த்ரோபேக் பேட்டி! | Saindhavi throwback interviews are circulated in  social media amid GV ...

பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவர்களது காதல் சைந்தவியின் ஒரு தோழி, ஜிவி பிரகாஷின் ஒரு நண்பருக்கு மட்டும் தான் தெரியும் என வீடியோவில் சைந்தவி கூறியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களை சைந்தவி பாடி உள்ளார். அந்த வகையில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் விழிகளில் ஒரு வானவில் பாடலை சைந்தவி பாடினார்.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து; விஜய் மனைவி சங்கீதா பாராட்டு? ரசிகர்கள்  அதிர்ச்சி! - தமிழ்நாடு

அந்த பாடலை கேட்டு நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சைந்தவியை பாராட்டியுள்ளார். அதன் பிறகு சங்கவிக்கும் சங்கீதாவுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு மலர்ந்தது. அதன் பிறகு தான் தலைவா படத்தில் இடம்பெற்ற யார் இந்த சாலையோரம் என்ற பாடலை சைந்தவி பாடியுள்ளார். அந்த பாடலுக்காகவும் சங்கீதா சைந்தவியை பாராட்டியுள்ளார். தலைவா படத்திற்கு பிறகு தான் சைந்தவி ஜிவி பிரகாஷ் காதல் எல்லாருக்கும் தெரியவந்தது என சைந்தவி கூறியுள்ளார்.

8th படிக்கும்போதே ஜிவி பிரகாஷை காதலிச்சேன்! விஜய் மனைவி சொன்னது! சைந்தவி  எமோஷனல் த்ரோபேக் | GV Prakash wife singer Saindhavi about to school love -  Tamil Oneindia