பொறுப்பான தந்தையா இருக்கும்… நம்ம சதீஷை பாருங்கப்பா… குழந்தையோடு விளையாடும் அழகிய புகைப்படங்கள்…!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சதீஷ், கடந்த 2006 ஆம் வருடத்தில் வெளிவந்த ஜெர்ரி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். எனினும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் ரசிகர்களிடையே பெயர் பெற்றார்.

   

 

அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகர்களின் நண்பராக வந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த ஆண்டில் வெளியான நாய் சேகர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதனிடையே கடந்த 2019 ஆம் வருடத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தன் மனைவி மற்றும் மகளுடன் சதிஷ்  செய்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.