‘வாவ்..செம கியூட்’… தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் நடிகை வரலட்சுமி… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ…

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.

   

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷாலுடன் இணைந்து ‘சண்டக்கோழி’, விஜயுடன் இணைந்து ‘சர்கார்’, சசிகுமார் உடன் இணைந்து ‘தாரை தப்பட்டை’ போன்றவர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இதை தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கச் செய்து வருகிறார்.

தற்பொழுது நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘வாவ் செம க்யூட்.. இரண்டு பேருமே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் அந்த வீடியோ இதோ….