
நடிகை அர்ச்சனா
தமிழ் சீரியல்களில் வில்லி ரோலில் நடித்து பிரபலமானவர், அர்ச்சனா. இவர் பொன்மகள் வந்தால், பொன்னுஞ்சல், வாணி ராணி, அழகி , நீலி , வள்ளி , வேலைக்காரன், அழகு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி, படங்களில் சிறிய ரோலில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக விஜய் சுந்தர் இயக்கத்தில் 2015-இல் சிம்பு நடிப்பில் வெளியான ‘வாலு’ படத்தில் கவுன்சிலரின் மனைவியாக நடித்து, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு அர்ச்சனா பேட்டியளித்த போது, படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த கசப்பான நிகழ்வை பற்றி பேசியுள்ளார்.
பேட்டி
அதில் அவர் பேசும்போது, ” ஒரு முன்னணி இயக்குனர் இயக்கிய திரைப்படத்தில் நான் நர்ஸ் ரோலில் நடித்துக் கொண்டிருந்தேன். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் எனக்கு நர்ஸ் உடை கொடுக்கப்பட்டது. உடனே இயக்குனர் என்னை அவருடைய அறைக்கு அழைத்து, நாளை நீங்கள் இந்த உடையை தான் உடுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்த உடை உங்களுக்கு சரியாக இருக்குமா..? என பார்க்க வேண்டும் என்றும் நீங்கள் போட்டுள்ள இந்த உடையை முட்டிவரை தூக்குங்கள் என்றும் கூறினார். நானும் சரி சாதாரணமாக கேட்கிறார் என்று தான் முட்டி வரை தூக்கினேன். பிறகு இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்று அவர் கூற, நானும் முட்டிக்கு மேல் உடையை தூக்கினேன்.
உடனே இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்று சொன்னதும், அவரின் திட்டம் புரிந்தது. நான் நாளைக்கு வந்து, அந்த உடையை போட்டு காட்டுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என்று கூறினார். மேலும் அடுத்த நாள் அந்த படப்பிடிப்புக்கு செல்லவில்லை எனவும் அந்த படத்திலிருந்து விலகி விட்டேன் எனவும் நடிகை அர்ச்சனா மாரியப்பன் தெரிவித்துள்ளார்.