பிரபல சின்னத்திரை நடிகர் பாரத் கல்யாணின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன் தான் பாரத் குமார்.

   

இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

கன்னட திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சிருங்காரம் என்ற திரைப்படத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதன் பிறகு பயணம், கோடி கோப்பா 2, பகவத் ஸ்ரீ ராமானுஜா உள்ளிட்ட கன்னட திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் கனா காணும் காலங்கள், பாரதிகண்ணம்மா மற்றும் கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்து வருகின்றார்.

இவர் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவரின் மனைவி பிரியதர்ஷினி தன்னுடைய 43 வயதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.

இவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தற்போது பரத் கல்யாண் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.