அட அப்படியா… முதலிரவு காட்சியை இந்த இடத்தில ஷுட் பண்ணோம்… கூச்சமே இல்லாமல் ரகசியத்தை உடைத்த சீரியல் நடிகை ஹேமா..!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல்

விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், 4 சகோதரர்களின் ஒற்றுமை, கூட்டுக் குடும்பம் போன்ற விஷயங்களை அழகாக காட்டி வருகிறது.

   

இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட  5 ஆண்டுகளை தாண்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் அண்மையில் சீரியலில் நடந்த சில சீன்கள் குறித்த  விசயங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, முதலிரவு காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டி இந்த அனுபவம் பற்றிய கேள்விகளை தொகுப்பாளர் கேட்டுள்ளார். உடனே ஹேமா, அந்த முதலிரவு காட்சியில் நடந்த ஒரு ரகசியம் மக்களுக்கு தெரியாது என்றார். மேலும் அந்த காட்சி எங்கு எடுத்தார்கள் தெரியுதா என்று அவர் கேட்டார். அதற்கு அந்த தொகுப்பாளர் ஏதாவது ஒரு ரூமில் தான் எடுத்திருப்பார்கள் என்று கூறினார்.

அதற்கு ஹேமா, ஆனால் அப்படி இல்லை, அன்றைய தினம் நாங்கள் சீரியல் ஷூட் எடுக்கப்போகும், அறையில் வேறொரு படத்தின் சீன் படமாக்கப்பட்டதால், எங்கள் சீரியலின் சீன்  முக்கியமானது என்பதால், இரு நாட்களில் எடுக்காவிட்டால் கஷ்டம் என்றும் கூறினார்கள். எனவே வேறு வழி இல்லாமல், நடுரோட்டில் ரூம் செட் போட்டு, முதலிரவு காட்சியை படமாக்கினோம். இவ்வாறு ஹேமா ராஜ்குமார் கூறியிருக்கிறார்.