தனது செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் சீரியல் நடிகர் நவீன்… இணையத்தில் வெளியான கியூட் வீடியோ…

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களும் தற்பொழுது பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் ஜெயா டிவியில் நியூஸ் ரீடராக தனது பயணத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து நியூஸ் 18, காவிரி என பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

   

தற்பொழுது சன் டிவியில் பணியாற்றி வருகிறார். இவர் கண்மணி சீரியல் நடிகர் நவீனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். நடிகர் நடிகர் நவீன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் இவர் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர் நடிகர் நவீன். இவர் தற்பொழுது காட்டேஜ் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படத்தின் ஷுட்டிங்கிற்காக சென்ற இடத்தில் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…