
நடிகை சமீரா ஷரீஃப்
பகல் நிலவு தொடர் மூலம் தமிழ் சீரியல் உலகத்துக்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ஷரீஃப். இவர் நடிகையாக மட்டுமன்றி சீரியல் தயாரிப்பாளராகவும் வலம்வந்த இவர், தாமே நடித்து, தயாரித்துள்ள `றெக்கை கட்டி பறக்குது மனசு’ சீரியல் 250 எபிசோடுகளைக் கடந்தது.
இவர் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் முகத்தில் காயம் இருக்கும் ஒரு புகைப்படத்தை சமீரா அவரது இன்ஸ்டா பக்கத்தில்,பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி, என்ன ஆனது என கேட்க தொடங்கியுள்ளனர்.
கணவர் தாக்கிவிட்டாரா?
இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும், என்னுடைய கணவர் தான் என்னை தாக்கிவிட்டார் என நினைப்பீர்கள். ஆனால் உண்மை என்ன என்பதை தெரிந்து கொண்டு முடிவு செய்யுங்கள் என்றார். ஆனால் இந்த காயத்திற்கு காரணம் என்னுடைய மகன் அர்ஹான் தான் என்று கூறினார். எனவே எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல், முடிவு செய்யாதீர்கள் எனவும் நடிகை சமீரா ஷெரிப் அனைவருக்கும் அறிவுரையும் கூறியுள்ளார்.