கணவரின் பிறந்தநாளுக்கு சொகுசு காரை பரிசாக அளித்த நடிகை ஆலியா மானசா…!

இன்றய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

   

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘கயல்’. இந்த சீரியலில் இயக்குனர் பி.செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார்கள்.

இந்த சீரியலில்  சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக்,  தேவி,  கோபி,  காமாட்சி போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் கதாநாயகனாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் சஞ்சீவ் கார்த்திக்.

இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்டவர். கோயம்புத்தூரில் உள்ள ஜெய்சி மேல்நிலைப்பள்ளியில் தனது படிப்பை  முடித்தார்.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் 2008 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆட்டம் பாட்டம்’ என்ற நடனப் போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்று  தனது பயணத்தை தொடங்கினர்.

அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ‘குளிர் 100 டிகிரி’ என்ற கல்லூரி சார்ந்த திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து  காதல் தோல்வி,  நீயும் நானும்,  சாகசங்கள் போன்ற பல படங்களில்   கதாநாயகனாக நடித்துள்ளார், இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.

2017ஆம் ஆண்டு  ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார்.

இத்தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். வெள்ளி திரையில் அடைய முடியாத வெற்றியை சின்னத்திரை மூலம் அடைந்தார்.

அதை தொடர்ந்து  அரண்மனைக்கிளி , காற்றின் மொழி,  எங்கிட்ட மோதாதே போன்ற சீரியல்களிலும்  நடித்துள்ளார்.

ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆலியா மானசா என்பவரை காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் .

தற்போது இவர் mahindra ஜீப் போன்று வாங்கியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களானது இணையத்தில் வெளியாகி வைரகி வருகிறது.