கர்ப்பமாக இருக்கும் போது….. கணவருடன் செம ரொமான்டிக்காக போட்டோஷூட் நடத்திய சீரியல் நடிகை ஆனந்தி…

நடிகையும் டான்சரமான ஆனந்தி சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து இருந்தார். இவருக்கு அழகாக ஒரு பெண் குழந்தையும் பிறந்திருந்தது.

   

பொதுவாக நடிகர்களை விட நடிகைகள் தான் திருமணத்திற்கு பிறகு ஆல் அட்ரஸ் இல்லாமல் சினிமாவை விட்டு காணாமல் போய்விடுவார்கள்.

அந்த வகையில் விஜய் டிவி புகழ் ஆனந்தி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதன் பிறகு கார்த்திகை பெண்கள், கள்ளிக்காட்டு, பள்ளிக்கூடம், கனா காணும் காலங்கள் என தமிழில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி, வாலு போன்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் ரௌத்திரம், டமால் டுமீல் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இறுதியாக பறந்து செல்லவா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த ஆனந்தி கடந்த 2017 ஆம் ஆண்டு அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ஆந்திராவில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் வைத்தது கூட ஆர்யா தான். அதுவும் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா ஆர்யாவீர்.

திருமணத்திற்கு பிறகு சின்னத்திரை பக்கம் வராமல் பிரேக் எடுத்துக் கொண்ட ஆனந்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜபார்வை என்ற தொடரில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்த தொடர் டிசம்பர் மாதம் தான் நிறைவடைந்தது. தொடர்ந்து ஆனந்தி மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருந்தார்.

சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அவரின் வளைகாப்பு புகைப்படங்களும் வைரலானது. அதைத் தொடர்ந்து அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் போது போட்டோ சூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.