ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. 2017 இல் ஒளிபரப்பான இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பரதா. இவர் இந்த சீரியலில் ஏற்று நடித்த மித்ரா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
கடந்த 2020ல் இவருக்கு திருமணமானது. இதைத்தொடர்ந்து கர்ப்பமான அவருக்கு வளைகாப்பு விழாவும் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை பரதா சன் டிவியில் ஒளிபரப்பான ‘தாலாட்டு’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஏற்கனவே அவருக்கு கர்ப்பமாகி கரு கலைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார் .இந்நிலையில் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் கொஞ்சம் உதவிகரமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்துள்ளார். ஆனால் இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலக்கி விட்டார்களாம்.
செக்கப் போன்ற காரணங்களுக்காக 10 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கேட்டதற்கு 6 நாட்கள் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர் சீரியல் குழுவினர். அதையும் செய்துள்ளார் நடிகை பரதா. ஆனால் அவர்கள் அவரின் விடுப்பு காலம் முடிவதற்கு முன்பாகவே ‘தாலாட்டு’ சீரியலை விட்டே அவரை தூக்கி விட்டார்களாம்.
இதை பற்றி அவர் கூறும் பொழுது, ‘தாலாட்டு சீரியல் வாய்ப்பு கிடைத்த பொழுது தான் ‘மொட்டை ராஜா’ என்று சீரியலிலும் வாய்ப்பு வந்தததாகவும் கூறியுள்ளார். இப்பொழுது தாலாட்டு சீரியல் கைவிட்டாலும், மொட்டை ரோஜா சீரியலில் ஒரு கதாபாத்திரம் கிடைத்து நடித்துக் கொண்டு வருவதாகவும், அவர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் நடிகை பரதா.