2 வது முறையாக கர்ப்பமான சீரியல் நடிகை காயத்ரியின் வளைகாப்பு விழா… வெளியான அழகிய வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி யுவராஜ். இத்தொடரில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

   

இந்த சீரியலை தொடர்ந்து தென்றல் நிலா, அரண்மனைக்கிளி போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்தார். அதோடு மட்டுமில்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி.

இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் அவர் தனது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காயத்ரி.

நடிகை காயத்ரி யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  ஒரு மகனும் உள்ளார். தற்பொழுது இவர் சமீபத்தில் தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக  தனது கணவருடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டார். தற்பொழுது இவரின் வளைகாப்பு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)