‘எல்லா  ட்ரெஸ்ஸும்  உங்களுக்கு அழகு தான்’…. ராஜஸ்தான் உடையில் நடன வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை பவித்ரா…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பல சீரியல்கள் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘தென்றல் வந்து என்னை தொடும்’. இந்த தொடரில் வினோத் மற்றும் பவித்ரா இருவரும் ஹீரோ மற்றும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இவர்களின் ரொமான்ஸுக்காகவே இந்த சீரியலை விரும்பி பார்ப்பவர்கள் ஏராளம்.

   

இந்த சீரியலில் நடிகை பவித்ரா மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து அசத்தி வருகிறார். இதை தொடர்ந்து இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்துள்ளார். இந்த சீரியலில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பவித்ராவிற்கு இணையத்தில் அதிகம் போல்லோவெர்ஸ் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பவித்ரா ஜனனி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்பொழுது ‘தென்றல் வந்து என்னை தொடும் ‘ சீரியல் ராஜஸ்தானில் எடுக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்  நடிகை பவித்ரா ராஜஸ்தான் உடையில் நடனமாடிய அழகிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பத்திவு  செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எந்த டிரஸ் போட்டாலும் அழகு தான் என்று வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Pavithra (@pavithra.janani)