இயக்குனர் எழிலியக்கத்தின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இப்படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்து மிகவும் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து ரேஷ்மாவுக்கு விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரேஷ்மா பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகளை விட ரேஷ்மாவுக்கு சீரியல் வாய்ப்புகளே அதிகம் கிடைத்தது. செய்யும் வேலையை முழுமனதோடு செய்தால் வெற்றி நிச்சயம் என்று சொல்வது போல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமானார்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கவும், டிஆர்பி-யில் முதல் இடத்தில் இருப்பதற்கும் ஒரு முக்கிய காரணம் ரேஷ்மா என்றே சொல்லலாம்.இந்த சீரியலில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் வில்லி கதாபாத்திரத்தை தனது ஸ்டைலில் வெளிக்காட்டி கோடானகோடி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்டார்.
சீரியலில் செம பிஸியாக இருக்கும் ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களை அதிகம் பதிவிடும் ரேஷன் தனது குடும்ப புகைப்படங்களை பதிவுடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.
அந்தவகையில் தற்போது கலர்புல் உடையில் இருக்கும் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.