சரண்யா துரடி
நடிகை சரண்யா துரடி விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் சரண்யா விக்ரம் என்ற ரோலில் நடித்து, சின்னத்திரையில் பிரபலமானார். மேலும் இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் தமிழ் தெரியாத நடிகைகள் இருக்கும் நிலையில், தமிழில் ல, ழ, ள உச்சரிப்பை சரியாக பேசும் சில கலைஞர்களில் ஒருவராக சரண்யா துரடி உள்ளார். மேலும் இவர் புதிய தலைமுறை போன்ற சில நியூஸ் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பின்னர் நடிகையாக களமிறங்கினார். தற்போது சீரியலில் இவர் கவனம் செலுத்துவதில்லை என்றாலும், இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து கொண்டு அழகான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
லேட்டஸ்ட் வீடியோ
அந்த வகையில் இவர் வெளிநாடுகளில் அதிகம் பயணம் செய்கிறார் என்றும் அப்படி சமீபத்தில் Turkey சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அப்போது அங்கு Cleopatra நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் அவர் எடுத்த வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ,