பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்குமாரின் மனைவியை பார்த்துளீர்களா…

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.

   

ஹலோ சென்னை என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதன். மூலமாக மிகவும்  மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் ஸ்ரேயா ,தமன்னா, மாளவிகா, போன்ற பல ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் நடிகையும் கூட.

இவர் தமிழில் ஜே ஜே, ஆயுத எழுத்து ,பலே பாண்டியா போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் திருட்டுப் பயலே ,மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் உள்ள நடிகைகளுக்கு டப்பிங்  கொடுத்துள்ளார்.

மேலும் பல திரைப்படங்களுக்கு பாடலும் பாடியுள்ளார். இவர் தன்னுடைய பன்முக திறமையால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் பாடகி சுசித்ரா நடிகர் கார்த்திக் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  நடிகர் கார்த்திக் குமார் அலைபாயுதே படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதை  சொல்ல போறோம், தெய்வ திருமகள், யாரடி நீ மோகினி, போன்ற  பல படங்களில் நடித்துள்ளார்.

பாடகி சுசித்ரா விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒலிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரி போட்டியாளராக கலந்து கொண்டார்.

சுசித்ராவுக்கும் கார்த்திக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக  விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் கார்த்திக் குமார் இளம் நடிகை அமிர்தா சீனிவாசனை இரண்டாம் திருமணம்  செய்து கொண்டார்.

இவர்கள் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தற்போது இவர்களின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.