இனி அடுத்த இளைய தளபதி சிவகார்த்திகேயன் இல்லை.. இந்த நடிகர் தான்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய். தற்போது விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட பிடிப்பானது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி நடிகர் விஜய் அரசியலில் நுழையுள்ளார்.

   

இந்நிலையில் இவரை ஆரம்பத்தில் இளைய தளபதி என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு தளபதி பட்டம் முதன் முதலில் வந்தது அப்போது இருந்து இப்போது வரை தளபதி விஜய் என்று அழைக்க தொடங்கினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் மேடையில் மைக் எடுத்து ஓரமாக வைப்பதையும்,

பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ஆரி அர்ஜுனன் மேடையில் இருக்கும் சேரை எடுத்து ஓரமாக வைப்பதையும் ஒப்பிட்டு ரசிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.அதில் நடிகர் ஆரி தான் இளையதளபதி என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவை ஆரி தனது X தளபக்கத்தில் ஷேர் செய்து நன்றி கூறியுள்ளார்.  இளையதளபதி பட்டத்தை ஏற்றுக்கொள்வது போல ஆரி ட்விட் செய்திருப்பதற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.