வெயிட்டிங்லயே வெறி ஏறுதே..! வீர மரணமடைந்த இராணுவ வீரராக சிவகார்த்திகேயன்.. SK-21மாஸ் அப்டேட்.!

சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ் கே 21 திரைப்படத்தில் அவருடன் சாய்பல்லவி நடிக்கிறார்.  கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் அத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று கூறப்பட்டிருக்கிறது.

   

அது மட்டுமல்லாமல் இன்று மாலையில் இத்திரைப்படத்திற்கான சர்ப்ரைஸ் வீடியோ வெளியாக இருக்கிறது என்று ராஜ்கமல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எஸ்.கே-21 என்ற இத்திரைப்படம் இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று கதை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த 2014 ஆம் வருடத்தில் மேஜர் முகுந்து வரதராஜன் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சோப்பியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்தார். அவரின் வாழ்க்கை வரலாறு தான் இத்திரைப்படத்தின் மையக்கதை.

எனவே, சிவகார்த்திகேயன் தன் வழக்கமான பாணியை விட்டு வித்தியாசமான கதைக்களத்தில் நடிப்பதால் ரசிகர்களிடையே இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.