புஷ் புஷ்….! ஹெல்மெட்டுக்குள் இருந்து கேட்ட சத்தம்….. எடுத்து பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!!!

ஹெல்மெட்டுக்குள் பாம்பு ஒன்று சிக்கி இருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தரும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இதன் மூலமாக சில நல்ல விஷயங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். அதாவது இதில் பகிரப்படும் வீடியோக்கள் சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. ஹெல்மெட் என்பது நம் உயிருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது. அப்படி ஒரு ஹெல்மெட்டுக்குள் பாம்பு இருந்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை ஒரு நபர் பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவில் ஒரு இடுக்கியை வைத்து ஹெல்மெட்டை தட்டி தட்டி பாம்பை வெளியில் எடுப்பதற்கு முயற்சி செய்கிறார்.

பின்னர் அது தலையை வெளியில் நீட்ட டபக் என்று பிடித்து இழுக்கிறார். உடனே பாம்பு வெளியில் வந்து விடுகின்றது. இந்த பாம்பு மிகவும் சிறியதாக இருக்கின்றது. பின்னர் அதனை வெளியில் விட்டுவிடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…