‘புதுப்பேட்டை’ படத்தில் அந்த சீனில்…. திசை மாறிய சினேகாவின் வாழ்க்கை….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய்.தளபதி 68 படத்தில் சினேகாவின் பெயர் அடிபட்டு வரும் நிலையில், செய்யாறு பாலு சினேகா குறித்து பல விஷயங்களை பேசி உள்ளார்.தமிழ் சீனிமாவில் மிகவும் பிரபலமானவர்  நடிகை சினேகா இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் பல மொழி படங்கள் ந டித்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என்று பெயர் எடுத்த, சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இந்நிலையில் செய்யாறு பாலு நடிகை சினேகா சினிமாவில் நுழைந்தது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், சினேகாவின் சொந்த ஊர் பண்ருட்டி, அவரது அப்பா திருமணம் மண்டபம் வைத்து இருக்கிறார். ஆனால், துபாயில் செட்டிலாகி, அங்கு படித்துக்கொண்டிருந்தவர் தான் சினேகா. பிறந்தது தமிழ் நாடு என்பதால், நன்றாக தமிழ் பேசக்கூடியவராக இருந்தார் சினேகா. இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்த சுசிகணேஷன் இயக்கிய ‘விரும்புகிறேன்’ படத்தில் பிரசாந்த் ஹீரோவாக ஒப்பந்தமானார்.

இந்த படத்திற்கு புதுமுக ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று, வார பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. சினேகா அந்த பத்திரிக்கைக்கு புகைப்படத்தை அனுப்பியதை அடுத்து, சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.ஆனால், ‘விரும்புகிறேன்’ படம் வெளியாகும் போதே சினேகா சர்ச்சையில் சிக்கினார்.  இயக்குநர் என்னை பாம்புகள் நிறைந்த கிணற்றில் பாதுகாப்பே இல்லாமல் இறக்கிட்டார் என்ற புகார் கூறியிருந்தார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர், கிணற்றில் இருக்கும் அந்த காட்சிதான் படத்திற்கு முக்கியமான சீன், அந்த கிணற்றில் தண்ணீர் பாம்பு இல்லை, அவருடன் லைட் மேன்கள் இருந்தபோதும் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றார்.இப்படி முதல் படம் வெளியான போதே சினேகா சர்ச்சையில் சிக்கினார். ஆனால், படம் வெளியான பின் அவருக்கு நல்ல பெயர் கிடைத்து குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இவர் எந்த அளவிற்கு பிரபலமானாரோ அந்த அளவிற்கு கிசுகிசு, சர்ச்சையில் சிக்கினார். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசு பரவியது.சினிமாவில் பல ஏற்றத்தாழ்வுகள் சர்ச்சைகளை சினேகா சந்தித்து உள்ளார். புதுப்பேட்டை படத்தில் ஒரு விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தில் நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன் என்று அழுத போது நடிகர் தனுஷ் அவருக்கு ஆறுதல் கூறி, இந்த கதாபாத்திரம் ரொம்ப நல்ல பெயர் வாங்கித் தரும் என்றார்.

அதே போல அந்த படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என்றார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது வரை நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார், என்று செய்யாறு பாலு சினேகா குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.