தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகைகளாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அதிலும் குறிப்பாக டாப் லிஸ்டில் சமந்தா, நயன்தாரா, ராஷ்மிகா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், திரிஷா உள்ளிட்ட பல நடிகைகளும் உள்ளனர்.
40 வயதை கடந்த பிறகும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர்.
அதுவே திருமணம் செய்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகைகள் ஏராளம்.
சமீபத்தில் ஹன்சிகா திருமணம் செய்து முடித்த நிலையில் அவர் மீண்டும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதனைப் போலவே சினேகாவும் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு குடும்பத்தை கவனித்து வந்த இவர் தற்போது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
40 வயதை கடந்துள்ள திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கிறார்.
நயன்தாரா திருமணம் முடித்து தற்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் போய்க்கொண்டு சினிமாவிலும் பிசியாக இருந்து வருகிறார்.
சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரேயா தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஜோதிகா தற்போது திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்து டாப் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதனைப் போலவே சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிறகும் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாகவே நடிகைகள் என்றால் பளபளவென வெள்ளையாக தான் இருப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மையிலேயே நடிகைகளின் முகம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த புகைப்படங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
வீட்டில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை நடிகைகள் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது.