பிரபல பாடகியான சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கடந்த 2016-ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா போன்ற பிரபலங்களின் அந்தரங்க போட்டோஸ் வெளியானது. அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அவரது கணவர் கார்த்திக் குமார் சுசித்ராவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுசித்ரா மீடியா பக்கம் வராமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 4-ல் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ தான் ஹாட் டாபிக்காக உள்ளது. அவர் கூறியதாவது, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரின செயற்கையாளர் என்பதை திருமணமான இரண்டு வருடத்திலேயே கண்டுபிடித்து விட்டேன். சுசி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் மாட்டி விட்டார்கள்.
அதற்கு முக்கிய காரணம் தனுஷும் என் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும்தான் என கூறியுள்ளார். மேலும் சுசித்ரா தனுஷ் மீனா திருமண செய்தி குறித்தும் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி பேசிய பத்திரிகையாளர் அந்தணன், தனுஷ் மீனா குறித்து சுசித்ரா பேசினார். அவர் என்ன மனநிலைமையில் அதை சொன்னார் என்பது தெரியவில்லை. அதனை கேட்கும் போது பேரதிர்ச்சியாக உள்ளது.
தனுஷ் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டார். அது மட்டுமில்லாமல் தனுஷ் குறித்து பல செய்திகள் ஊடகத்தில் பரவி வரும் இந்த நேரத்தில் சுசித்ரா கூறியது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. அவர் போகிற போக்கில் அதை சொல்லி இருந்தாலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும். தனுஷ் திரிஷா ஆகியோருடன் நெருங்கி பழகியதோடு, சினிமாவில் சுமார் 2௦ ஆண்டுகளுக்கும் மேல் இருப்பதால் சுசித்ரா கூறியதை எளிதில் கடந்து விட முடியாது என கூறியுள்ளார்.