திடீரென்று ஏற்பட்ட விபத்து… நூலிழையில் உயிர் தப்பிய ஏ ஆர் ரஹ்மானின் மகன்… என்ன நடந்தது தெரியுமா?… அவரே வெளியிட்ட புகைப்படம் உள்ளே…

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இவர்  இசையமைத்த ‘ஸ்லிம் டாக் மில்லியனர்’ என்ற இந்தி திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று  இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தினார்.

   

1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசைத்துறையில் அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான். தன்னுடைய முதல் படத்திலியே  தன்னுடைய முத்திரையை பதித்தார். இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்காக அவர் ‘தேசிய விருது’ பெற்றார். தொடர்ந்து இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

இந்தியாவின் மிகப்பெரிய விருதான ‘பத்மபூஷன் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. இசையால் உலக திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். அவர் இசையில் மயங்காதவர் யாருமில்லை. இதனால் உலகம் முழுக்க தனக்கென்று ரசிகர்களை கொண்டுள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருது பெற்ற ஒரே இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்.

தற்பொழுது இவர் பல திரைப்படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் 1995ஆம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரின் மகன் ஏ ஆர் அமீன் தற்போது இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார். அவர் சொந்தமாக பாடல்கள் கம்போஸ் செய்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஒரு பாடல் ஷூட்டிங்கில் அமீன் பங்கேற்று இருந்தபோது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதில் இருந்து நூலிழையில் அவர் உயிர் தப்பி இருக்கிறார். கிரேனில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த அலங்கார விளக்குகள் திடீரென கீழே வந்து விழுந்திருக்கிறது.”நான் நடுவில் தான் நின்று இருந்தேன்.

சில நொடிகள் முன் அல்லது பின்னர் அது விழுந்திருந்தால் எங்கள் தலையில் தான் விழுந்து இருக்கும்.  மொத்த டீமும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதோ அவரின் பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by “A.R.Ameen” (@arrameen)