சன் தொலைக்காட்சியில் சீரியல் நடிக்கும் முன்னனி நாயகிகளின் சம்பள விவரம்…. யாருக்கு அதிகம் தெரியுமா?

சன் டிவி சீரியல்

இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி பொழுதுபோக்கு தொலைக்காட்சியாகவும் உள்ளது. இது சென்னையைச் சேர்ந்த ஊடக நிறுவனமான சன் குழுமத்தின் சன் டிவி நெட்வொர்க்கின் முதன்மை அலைவரிசையாகும். இந்த அலைவரிசை கலாநிதி மாறன் என்பவரால் 14 ஏப்ரல் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் குடும்ப நாடகம், காதல் கதைகள், ரியாலிட்டி ஷோக்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது, இது பார்வையாளர்களை சேனலுடன் கவர்ந்திழுக்கிறது. ரோஜா போன்ற அதன் சில சீரியல்கள் அதிக TRP ஐ அனுபவிக்கின்றன.

sun tv serial list

   

தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே மிகவும் தரமான சீரியல்கள், சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 1000 எபிசோடுகளை தாண்டிய நல்ல கதைக்களம் கொண்ட தொடர்களும் உள்ள நிலையில், இந்த தொலைக்காட்சியில் தற்போது ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களின் நாயகிகள் அனைவருக்கும் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். எனவே அவர்களுக்காகவே சீரியலும் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கயல்,இனியா, எதிர்நீச்சல் அன்பே வா, கண்ணான கண்ணே, ரோஜா, திருமகள், கண்மணி, பாண்டவர் இல்லம் போன்ற தொடர்கள் ஒளிபரப்பப்படுகிறது.

சம்பள விவரம்

கயல், இனியா, எதிர்நீச்சல் என சன் தொலைக்காட்சி டாப் தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரத்தை பற்றி பார்க்கலாம்.

ஆல்யா மானசா

சின்னத்திரை குயின் என அழைக்கப்படும் ஆல்யா மானசா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் நடித்துள்ளார். இவரது சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Alya Manasa (aka) Alya Manasaa
மதுமிதா

சன் டிவியில் நாள்தோறும் இரவு 9:30 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜனனி கதாபாத்திரத்தில், தொடரின் நாயகியாக மதுமிதா நடித்துள்ளார். இவரது சம்பளம் ரூ. 15 ஆயிரம் ஆகும்.

சைத்ரா ரெட்டி

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்றாக “கயல்” சீரியல் உள்ளது. இது கடந்தாண்டு அக்டோபர் முதல் ஒளிபரப்பாகிறது. இதன் நாயகி சைத்ரா ரெட்டி 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

கேப்ரில்லா செல்லஸ்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் நாயகி ஆக நடித்து வருபவர் கேப்ரில்லா செல்லஸ். டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த இவர் இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவரது சம்பளம் ரூ. 40 ஆயிரம் ஆகும்.