இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘சூப்பர் சிங்கர்’ பென்னி தயாள் … திடீரென ஏற்பட்ட விபத்து… வைரலாகும் வீடியோ… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சாமானியர்களும் சூப்பர் சிங்கர் ஆக முடியும் என்பதை உணர்த்தும் வகையில் விஜய் டிவி அமைத்த மேடை தான் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சீசன் 2, சீசன் 3, சீசன் 4 என சென்று கொண்டே உள்ளது. தற்பொழுது ஜூனியருக்கான சீசன் முடிவடைந்த நிலையில் சீனியருக்கான சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

   

இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் பின்னணி பாடகர் பென்னி தயாள். இவர் குரலில் பாடி வெளிவந்த உனக்கென்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு, ஓமன பெண்ணே ஆகிய பாடல்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இவர் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்தி இருக்கின்றார்.

இந்நிலையில் பாடகர் பென்னி தயாள்  பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரது தலை மீது ட்ரோன் கேமரா மோதிய சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் உள்ள விஐடி கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் பென்னி தயாள் பங்கேற்று பாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பறந்து கொண்டிருந்த ​​​​ட்ரோன் கேமரா யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது தலையின் பின்புறத்தில் வந்து பலமாக மோதியது. இதனால் பலத்த காயம் ஏற்பட்ட பென்னி தயாள் உடனடியாக மேடையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அதேசமயம் இசை நிகழ்ச்சியும் அத்தோடு நிறுத்தப்பட்டது.

தற்பொழுது தனது உடல்நலம் குறித்து  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பென்னி தயாள் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது உடல்நலம் குறித்தும், மேலும் சில விழிப்புணர்வு தரக்கூடிய சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)