முக்கிய பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சூப்பர் சிங்கர் பூஜா… யார் தெரியுமா?… இதோ பாருங்க…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பேராதரவை கொண்டு தற்பொழுது சூப்பர் சிங்கர் சீசன் 9 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி சீனியர்களுக்காக தற்பொழுது நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொண்டு தற்போது பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் தான் பூஜா.

   

இவர் பிரபலமாக காரணம் டிஜே பிளாக் போடும் பாடல்கள் தான். இவர்கள் இருவரின் காம்போவிற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பூஜாவின் பெரியம்மா கூட டிஜேபிளாக்கை முதலில் கண்டித்து பேசினார். இதை தொடர்ந்து டிஜேபிளாக் மன்னிப்பும் கேட்டார். ஆனால் பின்னர் தான் தெரிய வந்தது அது ஒரு பிராங்க் என்று.

இந்நிலையில் பூஜா பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளாராம் பூஜா. அது மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களில் கூட இவர் பாடியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன்கூட சிறுவயதில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை சமீபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த இரண்டு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…