மனைவி மற்றும் பேரன்களுடன் இணைந்து பொங்கலை சூப்பராக கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… வைரலாகும் அழகிய புகைப்படம் இதோ….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் பேரன்களோடு இணைந்து பொங்கலை சிறப்பாக கொண்டாடிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்று தான் கூற வேண்டும். இவருடைய படங்களுக்கு என ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இன்றளவும் இருந்து கொண்டே தான் வருகிறது.

   

தற்பொழுது இவர் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகிக் கொண்டு வருகிறது. இத்திரைப்படத்தை முடித்தவுடன் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து ஜெய் பீம் படத்தை தயாரித்த இயக்கிய தா ச ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விரைவில் இத்திரைப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று தனது மனைவி மற்றும் பேரன்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகை சூப்பர் ஸ்டார் சிறப்பாக கொண்டாடினார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்திற்கு அவர்கள் ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…