தனது பெற்றோரின் சிலையை வீட்டில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார்… இணையத்தில் முதல் முறையாக வெளிவந்த பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ…

தமிழ் சினிமா ரசிகர்களால் ‘சூப்பர்ஸ்டார்’ இன்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

   

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரஜினிகாந்த் இத்திரைப்படத்திற்காக 7 நாட்கள் மட்டுமே ஒதுக்கி உள்ளாராம். இதைத்தொடர்ந்து TJ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் இணையத்தில் வெளியாகியது.

இப்படி திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை பற்றிய சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் தனது அம்மா மற்றும் அப்பாவின் சிலையை வீட்டில் வைத்திருப்பதாக கூறப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் ராமோஜி ராவ் மற்றும் ரமாபாய் எனும் தம்பதிக்கு பிறந்தவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர்களுடைய புகைப்படம் கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர்ரஜினிகாந்த் தனது பெற்றோரின் உருவ சிலையை வீட்டில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் முதன்முறையாக வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்….