
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பாலும், குணத்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அன்றிலிருந்து இன்று வரை அவரது ஸ்டைல் கொஞ்சம் கூட குறையவே இல்லை. தனது வாழ்க்கையை நடத்துனராக தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமாக புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல’ என்ற அவரது திரைப்பட வசனத்திற்கு ஏற்ப தற்பொழுதும் நடிப்பில் கலக்கி கொண்டு வருகிறார். அபூர்வராகம் தொடங்கி ஜெயிலர் திரைப்படம் வரை தன்னுடைய நடிப்பாலும், முயற்சியாலும் திரைத்துறையில் சாதனை படைத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
80களில் தொடங்கி தற்பொழுது வரை நடிப்பில் கலக்கி கொண்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இடத்தை எத்தனை நடிகர்கள் வந்தாலும் பிடிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இவர் 1981ல் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இதுவரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. ஆனால், இதுவரை பலராலும் பார்த்திருக்க முடியாத ரொமான்டிக் அன்சீன் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்…