தாமதமாகும் கங்குவா ரிலீஸ்.. என்ன தான் காரணம்..? சிவாவிடம் சூர்யா என்ன சொன்னார் தெரியுமா..?

சூர்யா நடித்துள்ள கங்குவார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில், ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

   

இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருப்பதாவது, கங்குவா திரைப்படத்தை முழுமையாக பார்த்த சூர்யா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இயக்குனர் சிவாவை கட்டிப்பிடித்து பாராட்டியிருக்கிறார்.

எனினும் அத்திரைப்படத்தில் VFX வேலைகளில் சில குறைகள் இருப்பதாக சூர்யா கூறியுள்ளார். எனவே, அதற்கான வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதால் கங்குவா திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.