தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களின் திருநங்கை கதாபாத்திர புகைப்படம் இதோ…

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சரத்குமார் இவர் முதலில் துணை வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி  மக்கள் மனத்தில் இடம் பிடித்து கதாநாயகனாக வலம் வந்தார். 

   

இவர் ‘காஞ்சனா’ படத்திலும் திருநங்கையாக நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த  ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ் திரையுலகில் ‘டூயட்’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டு பெற்றார். இவர் ‘அப்பு’ படத்தில் திருநங்கையாக நடித்து மக்களின் ஆதரவை பெற்றார்.

தமிழ் திரையுலகில்முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் ஜெயம் ரவி. இவர் தமிழ் திரை உலகில் ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இவர்  தமிழில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ,பூலோகம், டிக் டிக் ,எங்கேயும் எப்போதும் ,பேராண்மை தாம் தூம்,போன்ற பல ஹிட்டான படங்களை நடித்துள்ளார். இவர் ‘ஆதி பகவான்’  படத்தில் திருநங்கை நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி இவர் வில்லன், நடிகர்  என பல  குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர்’டீலக்ஸ்’ என்ற படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பு இருந்தது .

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விக்ரம். இவர்  தமிழில் சாமி ,தூள், அந்நியன் ,பிதாமகன், போன்ற படங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் தமிழ் திரைப்படத்தில் நடித்து ஏழு பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.’இருமுகன்’ படத்தில் விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை வியக்கச் செய்துள்ளார்.

தமிழ் திரை உலகில் முன்னாடி நடிகர் , இயக்குனர் ,நடன ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமையை கொண்டுள்ளவர் ராகவா லாரன்ஸ். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் ‘முனி’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர்’ காஞ்சனா’ படத்தில் திருநங்கையாக கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு என ஒரு தனி இடமே உண்டு அந்த வகையில் தனது நகைச்சுவை நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் நடிகர் விவேக்.

தமிழில்’ மனதில் உறுதி’ வேண்டும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். தமிழில் பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் ‘முரட்டுக்காளை’ என்ற திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.