பொதுவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். குறிப்பாக இளைஞர்கள் அவரின் திரைப்படத்தை பெரிதும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன் தனித்துவமான திரைக்கதை மற்றும் காட்சிகளால் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவரின் திரைப்படம் என்றாலே நிச்சயம் வெற்றி பெறும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அடுத்தடுத்து தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஈர்த்துவிட்டார். அந்த வகையில், ரஜினிகாந்தின் 171 வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்துவிட்டது.
அத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், தலைவர் 171 திரைப்படம் குறித்து வெளியான போஸ்டர் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, கைதி திரைப்படத்தை போன்று கைகள் கட்டப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக வாட்ச் இடம்பெற்றுள்ளது. எனவே, இது டைம் டிராவல் திரைப்படம் ஆக இருக்கும் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அத்திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் மட்டும் வெளிவந்திருக்கிறது என்று அந்தணன் கூறியுள்ளார்.