
நடிகர் சரத்குமாரின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பரவி வரும் ‘சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். இவர் தமிழில் வெளிவந்த ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம், சேரன் பாண்டியன், சூர்யவம்சம், சமுத்திரம் என நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரம்மாண்டமாக ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பெரிய பழுவேட்டாரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்பொழுது இவர் விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அவர் விஜய்க்கு அப்பா என்பது போல தான் ட்ரைலரில் காட்டப்பட்டது. ஆனால் உண்மையான ரோல் என்ன என்பதை படத்தினை பார்க்கும்போது தான் தெரியும் என சரத்குமார் தற்போது தெரிவித்து இருக்கிறார்.

தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் அவர் பேசும்போது சூப்பர்ஸ்டார் சர்ச்சை பற்றி விளக்கம் தெரிவித்துள்ளார். ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசும்போது ‘விஜய் சூப்பர்ஸ்டாராக வருவார் என நான் சூர்யவம்சம் படவிழாவிலேயே கூறி இருந்தேன்’ என கூறினார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது அவர் ‘விஜய் முதலமைச்சர் ஆவார் என நான் சொல்லவில்லை. அத்தோடு சூப்பர்ஸ்டார் என்பது ஒருவருக்கு கொடுக்கும் பட்டம் அல்ல. அதிகம் மக்களை கவரும் நபரை சூப்பர்ஸ்டார் என சொல்வார்கள். அமிதாப் பச்சன் ஒரு சூப்பர்ஸ்டார், ஷாருக் கான் ஒரு சூப்பர்ஸ்டார், அஜித்தும் சூப்பர்ஸ்டார் தான். விஜய் சேதுபதி வரும்போது அரங்கமே அதிர்கிறது, அவரும் ஒரு சூப்பர்ஸ்டார் தான்.
அத்தோடு ரஜினி சூப்பர்ஸ்டார் இல்லை என கூறவே இல்லை. அது டைட்டில் இல்லை ஒருவரிடம் இருந்து பிடிங்கி இன்னொருவருக்கு கொடுப்பதற்கு. அதை செய்ய நான்யார். சூப்பர்ஸ்டார் என்பது பட்டம் இல்லை, அதை மக்கள் மனநிலையில் இருந்து மாற்ற வேண்டும்’ என சரத்குமார் கூறி இருக்கிறார். இவ்வாறு பரவலாக எழுப்பப்பட்ட சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு நடிகர் சரத்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.