‘வாரிசு’ திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய தளபதி விஜய்… யாரெல்லாம் கலந்துகிட்டாங்கனு தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

‘வாரிசு’ திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய் தற்பொழுது படக்குழுவினரோடு  இணைந்து கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடைந்துள்ளது. இவர் தனது ரசிகர்களால் தளபதி என்றும் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரது படம் ரிலீஸ்ஆனால் அவரது ரசிகர்களுக்கு அன்று திருவிழா தான். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

   

மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். தற்பொழுது வாரிசு திரைப்படம் எதிர்பாராத அளவு வெற்றியை பெற்றுள்ளது.  இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தனது படக்குழுவினரோடு இணைந்து கொண்டாடியுள்ளார் தளபதி விஜய்.

இந்த பார்ட்டி நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த பார்ட்டியில் கேக் வெட்டி அவர் பட குழுவினர்களோடு கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த புகைப்படங்கள்  படுவைரலாகி வருகிறது.