தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக ஜனவரி 11ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீசான திரைப்படம்’ வாரிசு’. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான திரைப்படம் வாரிசு . இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார்.
தற்பொழுது 300 கோடி வசூலை கடந்து சாதனைப் படைத்து வருவதாக இணையத்தில் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இத்திரைப்படத்திற்கு லியோ என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும் இத்திரைப்படத்தை S.லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.
இந்த படத்தின் வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.
இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
நடிகர் விஜயுடன் நடிகை திரிஷா 13 வருடங்கள் கழித்து ஒன்றாக நடிப்பதால் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது காஷ்மீரில் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து தற்போது விஜய் மீண்டும் சென்னைக்கே திரும்பி இருக்கிறார்.
விமான நிலையத்தில் இருந்து காரில் ஏறுவதற்கு முன்பு, அங்கு நின்று இருந்த துப்புரவு பணியாளர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வைரல் வீடியோ…
Thalapathy @actorvijay spotted at Chennai Airport today. #Leo ✈️ Kashmirpic.twitter.com/g8DPDd2rng
— Leo Fan Page (@LeoOfficiaI) February 28, 2023