‘பூவே உனக்காக’ திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நம்ம தளபதி விஜய் இல்லையா?… அட இந்த பிரபல ஹீரோவா?…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்த திரைப்படம் ‘வாரிசு’. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தற்பொழுது ‘லியோ ‘திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

   

இதன் பின்னர் ‘தளபதி 68’ திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார் தளபதி விஜய். திரைப்படத்திற்காக அவர் 200 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற செய்தி கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் இந்த உயரத்தை அவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் எட்டியுள்ளார்.

அந்த வகையில் இவரின் திரை வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பூவே உனக்காக. ஒரு தலை காதல் பற்றி 1996 இல் வெளி வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் தான் காதலித்த பெண் வேறு ஒருவரை காதலித்ததால் அவரை அவருடன் சேர்த்து வைத்து தன்னுடைய காதல் வெற்றி பெறாவிட்டாலும் அந்த பெண்ணாவது சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார் விஜய்.

தற்போது  இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருந்த பிரபல ஹீரோ பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆம். அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் முரளி தான். ஒரு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போகவே நடிகர் விஜயை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் விக்ரமன். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து விஜயின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.