118 நாட்கள் நடந்த தங்கலான் படப்பிடிப்பு நிறைவு… வெளியான படப்பிடிப்பு தள புகைப்படங்கள்…

தமிழ் திரை உலகில் தற்போது பிரபலமான மற்றும் முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் தான் தங்கலான்.

   

இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார் மற்றும் அர்ஜுன் பிரபாகரன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

எஸ் எஸ் மூர்த்தி கலை இயக்கத்தை கவனிக்க பல தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொண்டுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சுமார் 118 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் முழுவதுமாக தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் படபிடிப்பு முடிந்ததற்கான பிரத்தியேக புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதில் இயக்குனர் பா. ரஞ்சித், கதையின் நாயகன் விக்ரம் மற்றும் நாயகி மாளவிகா மோகனராகிய மூவரும் வித்யாசமான ஒப்படையில் வண்ண கண்ணாடி அணிந்து தோன்றுவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமும் பெரிதும் எதிர்பார்க்கும் படைப்பாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

இந்த திரைப்படம் உலக அளவில் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.