மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட துணிவு பட நடிகர்… இதுதான் காரணமா?… வைரலாகும் தகவல் இதோ…

சமூக வலைத்தளங்களான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி அதிகமான ரசிகர்களை கவர்ந்தவர் டான்ஸர் ரமேஷ். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சியில் நடித்திருந்தார்.

   

இது மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்திலும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இவர் சமூக வலைத்தளங்களில் தனது குடும்பம் மறுமையில் இருப்பதாகவும், சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுவதாகவும் பேட்டி கொடுத்திருந்தார்.

‘எனக்கு நடனம் மட்டும் தான் தெரியும். வாய்ப்புகள் கிடைக்கவில்லை’ என்று அவர் கண்ணீருடன் பேசி இருந்ததை தொடர்ந்து துணிவு, ஜெயிலர் போன்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்பொழுது அவருக்கு குடிப்பழக்கம் இருக்கும் நிலையில் அவரது இரண்டு மனைவிகளுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.  டான்சர் ரமேஷ் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

திடீரென இவர் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இவருடைய முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இவரது இறப்பிற்கு ரசிகர்கள் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.