காசு இல்லாமல் ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை… கணவரின் மரணத்திற்கு பின்பு ஏற்பட்ட சோகம்…

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சத்யபிரியா. இவர் அந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரையுலகில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து அசத்தியவர். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் குடும்பத்தில் பெண்களை அடக்கும் ஆணாதிக்கம் பிடித்த ஆண்களின் கதையை தோல் உரித்து காட்டுகிறது.

மேலும் இந்த சீரியலில் குடும்பத்து பெண்கள் அவர்களை எதிர்த்து போராடியும் வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சூப்பர் ஹிட் சீரியல் தொடர்ந்து டிஆர்பியில்  முன்னணி இடத்தைப் பிடித்து வருகிறது. கோலங்கள் என்ற சூப்பர் ஹாட் சீரியலை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் தான் இந்த சீரியலையும் இயக்கி வருகிறார்.

மக்களுக்கு தகுந்தவாறு கதையில் பல நல்ல திருப்பங்களை கொண்டு வந்துள்ளார் இயக்குனர். தற்பொழுது இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சத்யபிரியா. இவர் சமீபத்தில் மறைந்த தனது கணவரை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தெலுங்கு தயாரிப்பாளரான தனது கணவரை காதலித்து வீட்டை மீறி திருமணம் செய்து கொண்டதாகவும், சில ஆண்டுகளுக்கு பிறகு அவரின் கணவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இறந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் கணவரின் மறைவிற்கு பிறகு, காசு இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட இவர் படங்களில் டப்பிங் கொடுக்க ஆரம்பித்துள்ளார். தற்பொழுது இந்த அளவிற்கு  தனது கடின உழைப்பால் முன்னேறி உள்ளார் நடிகை சத்யப்ரியா.