வீடு முழுவதும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்களை வரைந்து அருங்காட்சியகமாக மாற்றிய ஓவியர்… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.  இன்னொரு பக்கம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்திலும் நடித்துள்ளார்.

   

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விதார்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். இது கேமியோ ரோல் தான் என்றும் சொல்லப்படுகிறது.

லால் சலாம் படத்திற்கான டப்பிங் கொடுத்து முடித்ததும், ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படி நடிப்பில் இன்றளவும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினி.

இவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடி வருகின்றனர் இவரது ரசிகர்கள். அப்படி இவரது தீவிர ரசிகர்களின் ஒருவர்தான் ஓவியர் சுந்தர்.

இவர் தற்பொழுது மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தனது வீடு முழுவதும் சூப்பர் ஸ்டாரின் ஓவியங்களை வரைந்து அருங்காட்சியகமாக மாற்றியுள்ளார். இதனை அறிந்த ரஜினி அவரை குடும்பத்துடன் அழைத்து சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.