மூன்று நாட்களாக மருத்துவமனையில்கேப்டன்..! மூச்சுத்திணறல் காரணமாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகாந்த்  சினிமாவிற்காக தன் பெயரை விஜயகாந்த்  என்று மாற்றிக்கொண்டார். இவர் முதன் முதலில் 1979 ஆம் ஆண்டு வெளியான  ‘இனிக்கும் இளமை’படமானது மக்கள் நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலமாக  தனக்கான ரசீகர் பட்டாளத்தை  உருவாக்கினார். இப்படமானது  மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும்  ரீமேக் செய்யப்பட்டது.

   

இவ்ர் தமிழில் எராளமான படங்களில் நடித்துள்ளார்.  அதன் பிறகு அரசியல் தேமுதிக என்ற கட்சி  தொடங்கினார். அம்மா ஆட்சில் சட்டசபைல்  எதிர் கட்சியாக அமர்ந்தார். அதன் பிறகு உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் விஜயகாந்த். இந்நிலையில் நேற்றைய முந்தினம் உடல்நிலை உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் தனியார்  மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தேமுதிக சார்பில் வெளியிட்ட செய்தியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்று இருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரியப்படுத்தினர்.  இந்நிலையில் மூன்றாவது நாளாக சிகிச்சை பெற்று  வருகிறார். அவருக்கு மார்பு சளி மற்றும் இரும்பல் அதிகமாக இருந்ததன் காரணமாக மூச்சு விட  சிரமம் ஏற்பட்டிருக்கிறது அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை இதிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.

.அவர் சினிமாவில் நடிக்கும் பொழுது படப்பிடிப்பின் போது உடல் முழுவதும் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயம், வயது மூப்பு போன்ற காரணங்களால் அவருடைய உடல் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் அவருக்கு இது போன்று உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.