ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷின் கன்னத்தில் ஓங்கி அறைந்த பிரபல இயக்குனர்… அவமானத்தில் அழுத தனுஷ்… என்ன நடந்தது தெரியுமா?… நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் 2002ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

   

தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகர் தனுஷின் அப்பா இயக்குனர் கஸ்தூரிராஜா என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவரை தொடர்ந்து அவரது அண்ணன் செல்வராகவனும் ஒரு சிறந்த இயக்குனராக பல படைப்புகளை சினிமா உலகிற்கு கொடுத்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் , நானே வருவேன், வாத்தி திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அப்படி காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது, சோனியா அகர்வால் வீட்டுக்கு அவர் முதன்முறையாக செல்லும்போது, அந்த பிரம்மாண்ட வீட்டை பார்த்து பிரம்மித்துப் போகும்படியான காட்சி இடம்பெற்று இருக்கும். இந்த காட்சிக்காக தான் செல்வராகவனிடம் அறைவாங்கி இருக்கிறார் தனுஷ். சோனியா அகர்வாலின் வீட்டை பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டுமென சொல்லி கொடுத்திருக்கிறார் செல்வராகவன்.

ஆனால் தனுஷ், அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த காட்சியில் நடிக்கவில்லையாம். இந்த காட்சிக்காக அதிகளவில் ரீ-டேக்கும் வாங்கி இருக்கிறார். இதனால் டென்ஷன் ஆன செல்வராகவன் கோபத்தில் தனுஷின் கன்னத்தில் ஓங்கி அறை விட்டுள்ளார். அனைவர் முன்னிலையிலும் அடி வாங்கிய அவமானத்தில் கதறி கதறி அழுதுள்ளார் நடிகர் தனுஷ். தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.